இந்தியாவில் பெரும்பாலானோர் ரயிலில் பயணம் செய்கின்றனர். அப்படி ரயில் பயணத்திற்கு ஐ ஆர் சி டி சி செயலி மூலமாக பலரும் டிக்கெட் முன்பதிவு செய்கிறார்கள்.அவர்களுக்கு தற்போது மிக முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.அதாவது டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிமுறைகளை இந்திய ரயில்வே மாற்றி அமைத்துள்ளது. ஐ ஆர் சி டி சி மூலம் ஆன்லைனில் டிக்கெட் வாங்குபவர்களுக்கு தற்போது புதிய விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது.
அதன்படி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன்னர் மொபைல் நம்பர் மற்றும் இமெயில் ஐடி சரிபார்ப்பு செய்யப்படும். கொரோனா காரணமாக நீண்ட நாட்களாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யாத பயணிகளுக்காக இந்த புதிய விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. அந்த நபர்கள் மட்டும் ஐ ஆர் சி டி சி மூலமாக டிக்கெட் வாங்க முதலில் தங்கள் மொபைல் நம்பர் மற்றும் ஈமெயில் ஐடியை சரிபார்க்க வேண்டும்.
அதன் பிறகு தான் டிக்கெட் புக்கிங் செய்ய முடியும். இருந்தாலும் வழக்கமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு இந்த விதிமுறை பொருந்தாது. கொரோனா பாதிப்புகள் குறைந்து தற்போது ரயில்கள் மீண்டும் இயக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் கொரோனா பாதிப்புக்கு பிறகு செயலிழந்த கணக்குகளை உறுதிப்படுத்த மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் சரிபார்ப்பு செயல்முறையை இந்திய ரயில்வே கொண்டு வந்துள்ளது.