44-வது செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் 10ம் தேதி நடைபெறுகிறது. இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படவுள்ளது இதுவே முதன்முறையாகும். இந்த தொடரில் 187 நாடுகளிலிருந்து சுமார் 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் அனைத்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் முக்கிய அதிகாரிகளுடன் முதலமைச்சர் மேற்கொண்ட ஆலோசனையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு 28-ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.