குரங்கு அம்மை பல நாடுகளில் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் முதல் குரங்கு அம்மை பாதிப்பு கேரளாவில் கண்டறியப்பட்டது. கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு 3 ஆக அதிகரித்துள்ளது. மலப்புரத்தைச் சேர்ந்த 35 வயதான நபர் ஒருவர் துபாயிலிருந்து ஜூலை 6ம் தேதி கேரளாவிற்கு வந்ததாகவும், பின்னர் கடும் காய்ச்சலால் கடந்த 13ம் தேதி அங்குள்ள மஞ்சேரி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
நோயாளியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார். இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட 3 பேருமே கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.