Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

BREAKING : முசிறி அருகே ஆம்னி வேன் தீ பிடித்து 2 பேர் உயிரிழப்பு

திருச்சி  மாவட்டம் முசிறி அருகே சாலையோரத்தில் ஆம்னி வேன் கவிழ்ந்து தீப்பிடித்தது  இதில் 2 பேர் கருகி உயிரிழந்தனர்.

திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்குசென்று விட்டு வீடு திரும்பும்போது  இந்த விபத்து ஏற்பட்டது. இன்று காலை திருஈங்கோய்மலை என்ற இடத்தில் வந்தபோது டிரைவரின்  கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன்  விபத்துக்குள்ளானதில் தீப்பிடித்து எரிந்தது.

ஈரோடு மாவட்டம் கொளம்பலூரை  சேர்ந்த ஓட்டுனர் மணிகண்டன் (27) மயில்சாமி (35) என்ற இருவர் தீயில் கருகி உயிரிழந்தனர்.

வேனில் பயணம் செய்த பயணிகள் லோகநாயகி( 27), ஆறுமுகம்(53), செல்லம்மாள் (50), விசுவநாதன்(45), யுவதிஷ்(6) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.  விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |