உலக சுகாதார மையம், குரங்கு அம்மை பாதிப்பு உலக அளவில் நெருக்கடியானதா? என்பது பற்றி மீண்டும் பரிசீலிப்பதாக கூறியிருக்கிறது.
உலக நாடுகளை கொரோனா ஒருபுறம் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்க மறுபுறம், குரங்கு அம்மை நோய் சில நாடுகளில் பரவி, பீதியை கிளப்பிக்கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு ஆப்பிரிக்கா, ஐரோப்பாவில் பரவிய குரங்கு அம்மை தற்போது அமெரிக்காவிலும் பரவத் தொடங்கியிருக்கிறது.
உலக நாடுகளில் தற்போது வரை 15,000 மக்களுக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த பாதிப்பை கட்டுப்படுத்த இங்கிலாந்து, கனடா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் ஆப்பிரிக்காவிலிருந்து தடுப்பூசிகளை வரவழைக்கின்றன. இந்நிலையில், உலக சுகாதார மையம், குரங்கு அம்மை பாதிப்பை உலக அளவிலான நெருக்கடி என்று அறிவிப்பது குறித்து மறுபரிசீலனை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.