Categories
சினிமா

“காசேதான் கடவுளடா” படத்தின் டிரைலர்…. படக்குழு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!

சித்ராலயா கோபு இயக்கத்தில் முத்து ராமன், தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோரமா நடிப்பில் சென்ற 1972 ஆம் வருடம் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் “காசேதான் கடவுளடா”. இப்போது  இந்த படத்தை ரீமேக் செய்திருக்கின்றனர். ஆர்.கண்ணன் இயக்கும் இந்த படத்தில் சிவா கதாநாயகனாக நடித்து இருக்கிறார். அத்துடன் இதில் யோகிபாபு, சிவாங்கி போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். இத்திரைப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடிகை பிரியா நடித்துள்ளார்.

முன்பே வணக்கம் சென்னை மற்றும் சுமோ போன்ற படங்களில் சிவாவுடன் இணைந்து பணியாற்றியுள்ள பிரியா ஆனந்த், இப்போது 3வது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்த சூழ்நிலையில், தற்போது புது அப்டேட் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் சமூகவலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது

 

 

Categories

Tech |