Categories
உலக செய்திகள்

“சூயஸ் கால்வாய்”…. 135 வருடங்களில் இல்லாத அளவுக்கு வருவாய் உயர்வு….!!!!!

எகிப்து நாட்டின் மிக முக்கியமான வருவாய் ஆதாரமாக விளங்கும் சூயஸ் கால்வாய் வாயிலாக 2021 ஜூலை முதல் 2022 ஜூன் வரையிலும் எகிப்து அரசுக்கு சென்ற 135 வருடங்களில் இல்லாத அளவுக்கு சுமார் 7 பில்லியன் டாலர் வருமானமானது கிடைத்திருக்கிறது. கடந்த வருமானத்தைவிட இது 20.7 % அதிகம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த வருடம் சூயஸ் கால்வாயில் எவர்கிரீன் என்ற சரக்கு கப்பல் அகப்பட்டுக் கொண்டதால் சுமார் ஒரு வாரத்துக்கு கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக நாளொன்றுக்கு சுமார் ஆயிரம் கோடி டாலர் வர்த்தக இழப்பு ஏற்பட்டது.

2021-2022 ஆம் வருடத்தில் 13 லட்சம் டன் சரக்குகள் அந்த கால்வாய் வழியே சென்றிருக்கிறது. இது 2020-21 ஆம் வருடத்தை காட்டிலும் 10 % அதிகமாகும். சர்வதேச அளவில் பெட்ரோலிய பொருட்களின் விலையானது உயர்ந்துள்ள சூழ்நிலையில், அந்த கால்வாய் வழியே பொருட்களை கொண்டு செல்லும்போது செலவுகள் குறையும் என்பதால் ஏற்றுமதியாளர்கள் அதை தேர்வு செய்வதாக கூறப்படுகிறது. கொரோனா தொற்று ரஷ்யா-உக்ரைன் மோதல் போன்றவற்றின் காரணத்தால் எகிப்தின் அந்நிய செலாவணி கையிருப்பு குறையத் தொடங்கிய நிலையில், சூயஸ் கால்வாயின் வருவாய் அதிகரித்து இருப்பதால் கால்வாயை மேம்படுத்தும் வகையில் 400 கோடி டாலர் மதிப்பிலான வளர்ச்சித்திட்டங்களை அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |