Categories
சினிமா தமிழ் சினிமா

நிர்வாணமாக நடிப்பேன்…… பயில்வானோடு சண்டைக்கு சென்ற தமிழ் நடிகை….!!!!!!

பிரபல சின்னத்திரை நடிகை ரேகா நாயர் சினிமாவிலும் பத்துக்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான பார்த்திபனின் இரவின் நிழல் படத்திலும் ரேகா நாயர் நடத்துள்ளார். இதில் ராணி என்ற கதாபாத்திரத்தில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக நடித்திருந்த நிலையில் இந்த நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இருப்பினும் மேலாடை இன்றி அரை நிர்வாணமாக நடித்துள்ளார் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

இந்நிலையில் இரவின் நிழல் படத்தில் அரை நிர்வாணமாக நடித்த தன்னை தரக்குறைவாக பேசியதாக நடிகர் பயில்வான் ரங்கநாதனுடன், நடிகை ரேகா நாயர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நடைபயிற்சி செய்துகொண்டிருந்த ரங்கநாதனை எதேச்சையாக பார்த்த ரேகா, “நான் நிர்வாணமாக நடித்தால் உனக்கென்ன?” என ஆத்திரத்துடன் அடிக்க சென்றார். இதையடுத்து இருவரையும் பொதுமக்கள் விலக்கி விட்டனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Categories

Tech |