Categories
தேசிய செய்திகள்

மெட்ரோவில் குத்தாட்டம்….. இளம் பெண்ணின் கேவலமான செயல்….. வைரலாகும் வீடியோ….!!!!

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் பகுதியில் உள்ள மெட்ரோ ரயிலில் இளம் பெண் ஒருவர் ஒரு பாடலுக்கு நடனமாடும் வீடியோவானது வைரலாகி வருகின்றது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் நடிகர் நானி, நஸ்ரியா நடிப்பில் அண்மையில் வெளியான தெலுங்கு படம் தான் ‘ஆண்டே சுந்தரநிகி” (Ante Sundaraniki) படத்தில் இடம்பெற்ற ‘தந்தானந்தா’ என்ற பாடலுக்கு ஒருவர் நடனம் கொண்டிருந்தார். மேலும் ரயிலுக்கு வெளியில் நின்று நடிகர் கிச்சா நடிப்பில் வெளியான இந்தி படமான ‘விக்ரந்த் ரோனா’ திரைப்படத்தில் இடம்பெற்ற “ரா ரா ராக்கம்மா” பாடலுக்கும் நடனமாடியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலானது. இந்த வீடியோவை ட்விட்டர் பகுதியில் பகிர்ந்த இணையதள வாசிகள் இதுபோன்ற மெட்ரோ ரயில் நிலையங்களில் அடிக்கடி நடைபெறுகின்றது என்றும், அதிகாரிகள் ஆக்ஷனுக்கு தயாராகுங்கள் என்று பதிவிட்டு இருந்தார். இது குறித்து முறையாக விசாரணை நடத்தி அந்த இளம் பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹைதராபாத் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்தது. மேலும் காவல்துறையிலும் அந்த பெண் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த இளம் பெண் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் சிலர் இவருக்கு ஆதரவாக மற்றும் சிலர் அவருக்கு எதிராகவும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Categories

Tech |