Categories
மாவட்ட செய்திகள்

“தண்ணீரின் போக்கு அதிகரிப்பால் ஆற்றில் இருந்த படகு திடீரென்று கவழ்ந்தது”…. பெண் ஒருவர் பலி….!!!!

ஆற்றில் படகு கவிழ்ந்து பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கொள்ளிடம் கரையோரம் இருக்கும் நாதல்படுகை கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். அவரின் மனைவி காந்திமதி, மகன் ராசுகுட்டி. இவர்கள் ஆடுகளை வளர்த்து வருகின்றார்கள். இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வருவதற்கு முன்பே நாதல்படுகை கிராமத்திற்கு கணேஷ் வந்துவிட்டார் ஆனால் காந்திமதி மற்றும் ராசுகுட்டி உள்ளிட்டோர் மட்டும் திட்டு பகுதியில் ஆடுகளை பாதுகாத்துக் கொண்டு அங்கேயே தங்கியிருந்தார்கள். இந்நிலையில் நேற்று தண்ணீரின் வரத்து அதிகரித்ததால் அவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் ஆற்றில் சிக்கி தவித்தார்கள்.

இதையடுத்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். பின் ஆற்றின் நடுப்பகுதியில் அமைந்துள்ள திட்டு பகுதிக்கு சென்று காந்திமதி ராசுகுட்டி உள்ளிட்டோரை மீட்டு படகில் ஏற்றி கொண்டு வந்த பொழுது தண்ணீரின் போக்கு அதிகமாக இருந்ததால் படகு திடீரென கவழ்ந்தது. இதில் படகோட்டி செல்வராஜ் மற்றும் ராசுக்குட்டி உள்ளிட்டோர் நீந்தி கரை சேர்ந்தார்கள். ஆனால் காந்திமதி மட்டும் திட்டுப்பகுதி அருகே உள்ள முள் மரத்தின் கிளையை பிடித்துக்கொண்டு தொங்கிக் கொண்டிருந்தார். பின் அவர் விசைப்படகு மூலம் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.

Categories

Tech |