Categories
சினிமா தமிழ் சினிமா

கோபத்தில் எரிமலையாய் வெடிக்கும் பாக்யா…. பரபரப்பான ப்ரோமோவால் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

பாக்கியலட்சுமி சீரியலின் பரபரப்பான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் டி.ஆர்.பியில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் அமைதியான குடும்பத் தலைவியாக வாழ்ந்து வந்த பாக்யாவுக்கு, கோபியின் உண்மை முகம் தெரிய வந்ததால் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். இதனால் கோபியின் மீது குடும்பத்தினர் அனைவரும் கடும் கோபத்தில் இருக்கின்றனர்‌.

இந்நிலையில் தற்போது பாக்கியலட்சுமி தொடரின் பரபரப்பான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோவில் பாக்யா ராதிகா வீட்டிற்கு சென்று கடைசியில் நீங்களும் எனக்கு துரோகம் செய்து விட்டீர்களா என்று கோபத்துடன் கேட்கிறார். அதற்கு ராதிகா என்னை அறியாமல் தான் அனைத்தும் நடந்தது எனக் கூறுகிறார். இருப்பினும் பாக்யா சமாதானம் ஆகாமல் தொடர்ந்து எரிமலையாய் வெடித்துக் கொண்டிருக்கிறார். இந்த ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் வைரலான நிலையில், இன்றைய எபிசோடுக்கான ஆவல் அதிகரித்துள்ளது.

Categories

Tech |