அதிமுகவில் கடந்த சில மாதங்களாக ஒற்றை தலைமை விவகாரம் கட்சியையே இரண்டாகிவிட்டது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் மாறி மாறி சண்டையிட்டுக் கொண்டு முக்கிய நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்துக் கொண்டிருக்கின்றன. அது மட்டுமல்லாமல் சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் தற்போது அலுவலகம் போட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுகவிற்கு ஒரே ஒரு எம் பி உள்ள நிலையில்,”ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிமுக எம்பி இல்லை” என எடப்பாடி பழனிச்சாமி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், கட்சியிலிருந்து நீக்கியதால் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை அதிமுக எம்பி ஆக கருத வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியது செல்லாது என ரவீந்திரநாத், மக்களவை சபாநாயகருக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார். இது அதிமுகவில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.