Categories
தேசிய செய்திகள்

JEE நுழைவுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு….. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க…!!!

ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்திய அரசு கல்வி அமைச்சகத்தின் தேசிய தேர்வு முகமை சார்பாக ஐஐஐடி, என்ஐடி, ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பி.ஆர்க், பி.பிளான், பி.டெக் மற்றும் பி.இ போன்ற இன்ஜினியரிங் படிப்புகளுக்கு பிளஸ் 2 முடித்த மாணவ-மாணவிகள் சேர்வதற்காக ஆண்டுக்கு 2 முறை ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்படும் நிலையில், நடப்பாண்டுக்கான ஜேஇஇ பகுதி 1 நுழைவுத் தேர்வு கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற்றுள்ளது.

இதனையடுத்து ஜேஇஇ பகுதி 2 நுழைவுத் தேர்வு ஜூலை 21 முதல் 31-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வருகிற 25-ஆம் தேதி தேர்வு தொடங்கப்பட இருக்கிறது. இந்த தேர்வில் 6,29,778 பேர் பங்கேற்க இருக்கின்றனர். இந்த தேர்வு இந்தியாவில் 500 இடங்களிலும், வெளிநாடுகளில் 17 இடங்களிலும் நடைபெற இருக்கிறது. மேலும் நுழைவு தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் கடவுச்சொல், விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி போன்றவற்றை ஆன்லைனில் பதிவிட்டு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |