Categories
சினிமா

படப்பிடிப்பின்போது நடிகர் வடிவேலு செய்த காமெடி கலாட்டா…. வெளியான வீடியோ…. வைரல்….!!!!!

நகைச்சுவை நடிகரான வடிவேலு மீதான தடை நீக்கப்பட்ட சூழ்நிலையில், அவர் பழையபடி பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், மாமன்னன் திரைப்படங்களில் நடித்துவரும் வடிவேலு, அடுத்ததாக சந்திரமுகி 2 படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்தநிலையில் சந்திரமுகி-2 படப்பிடிப்பின்போது வடிவேலு செய்துகாண்பித்த சுறா திரைப்படத்தின் காமெடிசீன் வீடியோவானது வைரலாகி வருகிறது. முன்னதாக இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் உருவான இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நடிகர் வடிவேலு நடிக்கவே தடைவிதிக்கப்பட்டது.

இதனால் பல படவாய்ப்புகள் அவரை விட்டுச் சென்றது. தற்போது அனைத்து பிரச்சனைகளும் சுமூகமாக தீர்வான சூழ்நிலையில் மீண்டும் அவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். ஹீரோவாக நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்துவரும் வடிவேலு மற்ற படங்களில் சிறப்பான கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ராகவாலாரன்ஸ், ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் சந்திரமுகி 2 படத்தில் மீண்டும் காமெடி கதாபாத்திரத்தில் வைகைப் புயல் வடிவேலு நடித்து வருகிறார்.

அண்மையில் படக்குழு நடத்திய பூஜை புகைப்படங்கள் வெளியாகி டிரெண்டாகியது. தற்போது வடிவேலு படப்பிடிப்பின்போது செய்த ரகளை வீடியோவானது டிரெண்டாகி வருகிறது. அதாவது விஜய், தமன்னா நடிப்பில் வெளியாகிய சுறா படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி பாட்டுப்பாடும் போது, ரொம்ப உச்சகட்டையில் பாடாதீங்க அப்புறம் ஹார்ட் வெடிச்சுடும் என்பதை சொல்லாமல் செய்கையிலேயே செய்து வடிவேலு கிண்டல் செய்து இருப்பார். இப்போது அதே காமெடியை சந்திரமுகி 2 படப்பிடிப்பின்போது வடிவேலு செய்ய, அதை படம்பிடித்த நடிகை ராதிகாசரத்குமார் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கி இருக்கிறார்.

Categories

Tech |