Categories
அரசியல் மாநில செய்திகள்

11 நாட்களுக்கு பின் இன்று…. அதிமுக அலுவலக சீல் அகற்றம்….!!!!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது. அதிமுக அலுவலகம் அருகே ஏற்பட்ட மோதல் காரணமாக அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் அதிமுக அலுவலகத்தை மீண்டும் திறக்க உயர்நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.

உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை இன்று அதிகாரிகள் அகற்றினர். 11 நாட்களுக்கு பிறகு இன்று அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |