Categories
உலக செய்திகள்

இந்திய மாணவர்களுக்கு விரைவில் சீனா அனுமதி….. வெளியான சூப்பர் தகவல்….!!!!

சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் பரவ தொடங்கியது. இது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தனது நாட்டில் கொரோனா பாதிப்பு பூஜ்ய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக வெளிநாட்டினருக்கு விசா வழங்குவதை சீனா நிறுத்தியது. அதுமட்டுமில்லாமல் தனது நாட்டில் படித்து வந்த வெளிநாட்டு மாணவர்களையும் வெளியேற்றினர்.

இதனால் இந்தியாவை சேர்ந்த 23 ஆயிரம் மாணவர்கள் உள்ளிட்ட 5 லட்சம் வெளிநாட்டு மாணவர்களின் கல்வி இரண்டு ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து சீன பிரதமர் லீ கேகியாங் நேற்று கூறியது, சீன கல்வி நிறுவனங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் திரும்பி வரும் வகையில் சர்வதேச பயண கட்டுப்பாடுகளில் தளர்வுகள் படிப்படியாக அளிக்கப்பட்டு வருகிறது என்று அவர் அறிவித்துள்ளார்.

Categories

Tech |