விழுப்புரம் செஞ்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் இயற்பியல் தேர்வு நடந்தது. அதில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர். அப்போது மதிய உணவு நேரம் நெருங்கியதால் தேர்வை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று இயற்பியல் ஆசிரியர் நந்தகோபால் என்பவர் அனைத்து மாணவர்களையும் வரிசையாக நிற்க வைத்து பிரம்பால் முதுகில் அடித்துள்ளார். இதனை மாணவர்கள் வீட்டிற்குச் சென்று பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதனால் காலை பள்ளியின் முன்பு திரண்ட பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து பள்ளிக்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் மாணவர்களின் உடலில் இருந்த பிரம்படி தடங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனிடையே இயற்பியல் ஆசிரியர் நந்தகுமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா உத்தரவிட்டுள்ளார். கிட்டத்தட்ட 72 மாணவர்களை மாட்டை அடிப்பது போல ஆசிரியர் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.