Categories
மாநில செய்திகள்

மாணவர்களே உஷார்…. இதை யாரிடமும் சொல்லாதீங்க…. இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி எச்சரிக்கை….!!!!

இன்ஜினியரிங் கவுன்சிலிங் விண்ணப்பித்த மாணவர்கள் தங்களின் பயனர் எண்,கடவுச்சொல் ஆகியவற்றை யாரிடமும் பகிர வேண்டாம் என்று தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் பங்கேற்க இதுவரை 1.90 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 110டிஎப்சி என்ற உதவி மையங்களுக்கு சென்று மாணவர்கள் விபரங்களை தெரிந்து கொள்ளும் வகையிலும் அங்கிருந்தே விண்ணப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே சிலர் டிஎப்சி மையத்திலிருந்து பேசுவதாக கூறி மாணவர்களின் விண்ணப்ப பதிவுக்கான பயனர் எண், கடவுச்சொல் (பாஸ்வேர்டு) என்ன என்று கேட்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவ்வாறு இதனை நம்பி விவரங்களை அளிக்கும் மாணவர்களின் விண்ணப்பத்தில் இந்த ஆசாமிகள் தகவல்களை மாற்றி அமைக்கவும் சில கல்லூரிகளுக்கு இடைத் தரகர்களாக செயல்பட்டு குறிப்பிட்ட கல்லூரிகளை மாணவர்கள் விரும்புவது போல செய்யவும் திட்டமிடுவதாக புகார் அளித்துள்ளது.

அதனால் தங்களின் பயனர் எண் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை மாணவர்கள் யாரும் பகிர வேண்டாம் எனவும் டிஎப்சி மையங்களில் இருந்து எந்தவித காரணத்திற்காகவும் தங்களின் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கேட்க மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளது. எனவே மாணவர்கள் தொலைபேசி அழைப்புகளில் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |