மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதால் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள உச்சரிச்சான்பட்டியல் மந்தை கருப்பு சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் பல்வேறு கிராமங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 100-க்கு மேற்பட்ட மாடுகள் அவிழ்த்து விடப்பட்டது. இந்நிலையில் மாடுகள் முட்டி 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதில் படுகாயமடைந்த பாஸ்கரன் என்பவரை உடனடியாக மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாஸ்கரன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் மஞ்சுவிரட்டு முறையான அனுமதி பெறாமல் நடைபெற்றது. இது குறித்து குறிஞ்சிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.