மகரம் ராசி அன்பர்களே, இன்று நீண்ட நாள் ஆசை நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். வீடு வாகன பராமரிப்புச் செலவுகள் குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கி நிற்கும். இன்று கடன் தொடர்பான பிரச்சினைகள் தீரும்.
பணவரவு சிறப்பாக இருக்கும். மன குழப்பம் நீங்கி உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். இன்று திறமையாக செயல்பட்டு பாராட்டுக்களைப் பெறுவீர்கள். சின்ன விஷயத்துக்கு கூட கோபம் கொஞ்சம் வரும், நிதானமாக இருப்பது நல்லது. வேற்று மொழி பேசும் நபரால் நன்மை ஏற்படும். புதிய நபர்களால் உங்களுக்கு லாபம் கூடும்.
இன்று மாணவர்கள் கல்விக்காக கொஞ்சம் போராடித்தான் வெற்றியை பெற கூடும். கடினமாக உழைத்து பாடங்களைப் படியுங்கள், தயவுசெய்து படித்த பாடங்களை எழுதிப் பாருங்கள்.இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும்.
அது மட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை:மேற்கு
அதிர்ஷ்ட எண்-3 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்