டுவிட்டர் நிர்வாகம் தொடர்பான வழக்கு வருகிற அக்டோபர் மாதம் விசாரணைக்கு வரும் என நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்தார். அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 44 மில்லியன் அமெரிக்க டாலருக்கு டுவிட்டர் நிர்வாகத்தை வாங்குவதற்கு எலான் மஸ்க் ஒப்பந்தம் போட்டார். இந்நிலையில் எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்திடம் போலியாக உள்ள கணக்குகள் மற்றும் பயன்படுத்தப்படாத கணக்குகள் உள்ளிட்ட சில விவரங்களை கேட்டார்.
ஆனால் டுவிட்டர் நிறுவனம் போலி கணக்குகள் தொடர்பான விவரங்களை தர மறுத்துள்ளது. இதன் காரணமாக கடந்த 9-ம் தேதி மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிடுவதாக அறிவித்தார். இதன் காரணமாக டுவிட்டர் நிறுவனம் ஒப்பந்தப்படி டுவிட்டர் நிறுவனத்தை வாங்க வலியுறுத்தி மஸ்க் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது மஸ்க் தரப்பில் விசாரணையை அடுத்த வருடம் ஒத்தி வைக்குமாறு கேட்கப்பட்டது. ஆனால் நீதிபதி வருகிற அக்டோபர் மாதத்திற்கு வழக்கு விசாரணை நடைபெறும் என உத்தரவிட்டார்.