படகு சவாரிக்காக நவீன படகு கொண்டுவரப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் வாலாங்குளம் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் படகு சவாரி தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக மோட்டார் படகுகள், பெடல் படகுகள், வாட்டர் சைக்கிள் படகுகள் போன்றவைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதேபோன்று உக்கடம் பகுதியில் அமைந்துள்ள பெரிய குளத்திலும் தொடங்கப்பட இருக்கிறது. இதன் காரணமாக 2 பெடல் படகுகள், 2 துடுப்பு படகுகள், 2 ஸ்கூட்டர் படகுகள் போன்றவைகள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது புதிதாக 12 பேர் பயணம் செய்யக்கூடிய அதி நவீன சொகுசு படகு ஒன்றும் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த படகு குஜராத்தில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தப் படகில் கயிறு கட்டப்பட்டு ஸ்கூட்டர் படகு மூலமாக இழுத்து செல்லப்பட்டு படகு நிறுத்துமிடத்தில் கொண்டு நிறுத்தப்பட்டது. இந்த படகின் செயல்பாடுகளை கணினி மூலம் கண்காணிக்க முடியும். மேலும் அதிநவீன படகுடன் சேர்த்து, 2 ஸ்கூட்டர் படகுகள், 3 சக்கரம் பொருத்தப்பட்ட பெரிய சைக்கிள் போன்ற படகு மற்றும் 2 துடுப்பு படகுகளும் கொண்டுவரப்பட்டுள்ளது.