Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய ( 07.02.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

இன்றைய  பஞ்சாங்கம்

07-02-2020, தை 24, வெள்ளிக்கிழமை,

இராகு காலம் – பகல் 10.30-12.00,

எம கண்டம்-  மதியம் 03.00-04.30,

 

குளிகன் காலை 07.30 -09.00,

 

சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30.

 

மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00

 

இன்றைய ராசிபலன்

 

மேஷம் 

இன்று புதிதாக வியாபாரம் தொடங்கும் முயற்சிகள் யாவும் வெற்றியை கொடுக்கும். பணி தொடர்பாக வெளியூர் செல்ல கூடும்.  பெண்கள் பொறுப்புணர்ந்து  நடந்து கொள்வார்கள். உறவினர்களின் மூலம் நல்ல பலன் கிடைக்கும். புதிதாய் பொருள் வீடு வந்து சேரும். சுப நிகழ்ச்சிகள் கைகூடும்.

ரிஷபம்

இன்று வரவை காட்டிலும் செலவுகள் அதிக அளவில் இருக்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறைய வாய்ப்புகள் உள்ளது. தொழிலில் பொருளாதார தொடர்பான பிரச்சனைகளை சமாளிக்க கடன் வாங்கக் கூடும். சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.

மிதுனம்

இன்று சுபச் செலவுகள் இருக்கும். அரசு துறையில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்திருந்த சலுகை கிடைக்கப் பெறும். பெரியவர்களின் ஆதரவும் அன்பும் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். தொழிலில் பங்குதாரர்களுடன் சுமுகமாக செயல்பட்டு அதிக அளவில் லாபம் பெறுவீர்கள்.

கடகம்

இன்று உடல் நலம் தொடர்பாக சிறிய  மருத்துவச் செலவுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செய்வது சிறப்பு. நண்பர்களின் சந்திப்பு ஆனந்தத்தை கொடுக்கும். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

சிம்மம்

இன்று திடீர் பணவரவு இருக்கும். வயதில் மூத்தவர்களின் மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகள் படிப்பில் முன்னேற்றம் காண்பார்கள். வேலையில் புதியவர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறும்.. பழைய பாக்கிகள் வசூலாகும். தொழிலில் கொடுக்கல் வாங்கல் நல்ல முறையில் இருக்கும்.

கன்னி

இன்று பிள்ளைகள் மன மகிழ்ச்சி தரும் விஷயங்களை கொண்டு வருவார்கள். குடும்பத்தில் ஒற்றுமை கூடும். வியாபாரத்தின் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் யாவும் நல்ல பலனைக் கொடுக்கும். சிலர் பொன் பொருள் வாங்கி சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் நினைத்தபடி இடமாற்றம் கிடைக்கும்.

துலாம்

பிள்ளைகளுக்காக தேவையற்ற செலவுகள் செய்யக்கூடும். தொழிலில் பங்குதாரர்களுடன் சிறிய மனவருத்தம் ஏற்படும். உடல் நலத்தில் அக்கறை தேவை. பணியில்  ஏற்படும் சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து உதவி செய்வார்கள். நண்பர்களின் ஆதரவு நிம்மதியை கொடுக்கும்.

விருச்சிகம்

இன்று உழைப்பிற்கு தகுந்த பலன் அடைவதில் தாமதம் ஆகும். உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நிலைப்பதால் உடல்நலத்தில் சிறிய பாதிப்புகள் இருக்கும். உணவு விஷயத்தில் சற்று கவனம் தேவை. வியாபாரம் தொடர்பான கொடுக்கல் வாங்கலில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

தனுசு 

மனநிறைவு தரும் நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடந்தேறும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் நாட்டம் செல்லும்.. சுபகாரிய தொடர்பான பேச்சுவார்த்தைகள் நல்ல பலனைக் கொடுக்கும். வியாபாரம் தொடர்பாக பொருளாதாரம் இன்று நல்ல முறையில் இருக்கும். பணியில் சிலருக்கு வாய்ப்புகள் தேடிவரும்.

மகரம்

இன்று அனைத்து காரியத்தையும் துணிச்சலுடன் செய்வீர்கள். தொழிலில் வெளியூர் பயணங்களால் முன்னேற்றம் காணப்படும். பணி தொடர்பாக வெளிவட்டார நட்பு ஏற்படும். இல்லத்தில் மகன் வழியில் நற்செய்திகள் வந்து சேரும். புதிய பொருட்களை வீட்டிற்கு வாங்கி சேர்ப்பீர்கள்.

கும்பம்

இன்று பிள்ளைகளால் மன வருத்தம் ஏற்படும். இல்லத்தில் அமைதியற்ற சூழல் நிலவும். பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் நற்பலன் கிடைக்கும். பெரியவர் நட்பு வியாபார வளர்ச்சிக்கு உதவும். இன்று செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.

மீனம்

இன்று பணவரவு போதுமானதாக இருக்கும். இல்லத்தில் சுபகாரியங்கள் நடக்கும். பிள்ளைகள் உதவியாக இருப்பார்கள். பணியில் எதிர்பார்த்த இடமாற்றம் இருக்கும். வியாபாரம் தொடர்பாக வெளியூர் செல்ல வேண்டி வரும். தேவை  அனைத்தும் இன்று பூர்த்தியாகும். கடன்கள் தீரும்.

Categories

Tech |