தபால் அலுவலகத்தில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள பாதுகாப்பான சேமிப்பு திட்டங்களில் வங்கி மற்றும் தபால் அலுவலகத்தில் உள்ள சேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பான திட்டமாக இருக்கிறது. இதில் உள்ள பல்வேறு திட்டங்களில் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்த தொகையை இரட்டிப்பாக மாற்றிக் கொள்ள முடியும். தபால் அலுவலகங்களில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், மாத வருமான திட்டம், PPF திட்டம், தேசிய சேமிப்பு திட்டம் மற்றும் பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இருக்கிறது. இந்நிலையில் தபால் அலுவலகங்களில் பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டங்களில் பணம் கட்டும் போது அவர்களின் எதிர்காலம் குறித்த கவலை நீங்குகிறது.
இதனையடுத்து தற்போது 2022-23 நிதி ஆண்டிற்கான தபால் நிலைய சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் அதிகரிக்குமா என்பது தான் பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது. இது தொடர்பாக மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி சிறுசேமிப்பு திட்டத்தில் உள்ள வட்டி விகிதத்தில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்பட மாட்டாது. இதைத்தொடர்ந்து தபால் அலுவலகங்களில் கணக்கு தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும், 1 வருடத்திற்கு 4 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் எனவும், 10-ம் தேதிக்கும் மாத இறுதிக்கும் உள்ள இடைப்பட்ட காலத்தில் வட்டி தொகையானது நிர்ணயிக்கப்படும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.
அதன்பிறகு 5 வருடங்களுக்கு RD கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு வருடத்திற்கு 5% வட்டி வழங்கப்படும் எனவும், ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 100 டெபாசிட்டுகள் வரை பெறலாம் எனவும், அதிகபட்ச வரம்பு என்று எதுவும் கிடையாது எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தில் ஒரு வருடத்திற்கு 7 சதவீத வட்டியும், 5 ஆண்டுகால வைப்புத் தொகைக்கு 6.7% வட்டி விகிதமும், 1 முதல் 3 ஆண்டுகால வைப்பு தொகைக்கு 5.5 சதவீதமும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.