Categories
அரசியல் மாநில செய்திகள்

மின்கட்டணம் உயர்வு: “மத்திய அரசு மீது பழிபோடுகிறது தமிழக அரசு” அண்ணாமலை காட்டம்…..!!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசை குறை கூற வேண்டாம். மின் கட்டணத்தை உயர்த்துமாறு மத்திய அரசு வலியுறுத்தவில்லை. மத்திய அரசு கொடுப்பது மானியம். தேவை எனில் பெற்றுகொள்ளலாம்.   மின்வாரியத்தை முறையாக நடத்தினால், அரசுக்கு இழப்பு ஏற்படாது என்றார். மத்திய அரசின் மீது பழிபோட்டு மின் கட்டணத்தை தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது  தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்குவதை நிறுத்திவிட்டு, அரசு மின்னுற்பத்தி நிலையங்களில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தினார்.

தமிழக அரசு, மின் செயற்கை தட்டுபாட்டை ஏற்படுத்தி, வெளி மார்க்கெட்டில் இருந்து, அதிக பணம் கொடுத்து வாங்குகிறார்கள். நஷ்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் வெளியில் இருந்து மின்சாரத்தை வாங்குவது சரியா? வரும் 23ம் தேதி மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.

Categories

Tech |