காமதேனு திருமண மண்டபத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திருமண மண்டபத்தை திறந்து வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவுத் துறை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துறை. இது மக்களின் உயிர்நாடியாக இருக்கிறது. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டுறவு சொசைட்டிகள், 47 கூட்டுறவு வங்கி மற்றும் நகர்ப்புற வங்கிகள் உள்ளன. கிட்டத்தட்ட கூட்டுறவு வங்கிகளில் மட்டும் 66 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மக்கள் வயிற்று தொகை வைத்துள்ளனர்.
அடுத்த மூன்று மாதங்களில் படிப்படியாக ரேஷன் கடைகளை மாற்றி அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 35 ஆயிரம் கடைகளையும் ஒரே சமயத்தில் மாற்றி அமைப்பது கடினமான விஷயம். மேலும் ரேஷன் கடைகளில் வரும் பொது மக்களுக்கு பணம் கொடுத்து பொருட்களை வாங்க பணியாளர்கள் ஒருபோதும் கட்டாயப்படுத்தக்கூடாது.
பொதுமக்கள் தாமாக முன்வந்து வாங்குவதற்கான விளம்பரத்தை மேற்கொள்ள வேண்டுமே தவிர அந்த பொருளை வாங்க சொல்லி ஒருபோதும் மக்களை கட்டாயப்படுத்தக் கூடாது. ரேஷன் பொருட்களை தவிர்த்து மற்ற எந்த பொருளையும் விற்பனை செய்யக்கூடாது என்று தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.