தமிழகத்தில் 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான இறுதித் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு அதற்கான முடிவுகள் ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்டன. இந்த 10 மற்றும் 12 ம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 25ஆம் தேதி முதல் துணைத்தேர்வு நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில், 12-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் நாளை முதல் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. ஜூலை 25-ம் தேதி +2 துணைத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில், http://dge.tn.gov.in இணையதளத்தில் நாளை பிற்பகல் முதல் ஹால் டிக்கெட்டுகளை விண்ணப்பித்தவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.