Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்!… வசமாக சிக்கிய 6 பேர்…. அதிரடி காட்டிய போலீஸ்…..!!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் சென்ற சில மாதங்களாக போதைகாளான் மற்றும் கஞ்சா விற்பனை அதிகரித்து இருப்பதாக சமூகஆர்வலர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்படி கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் தலைமையிலான காவல்துறையினர் மேல்மலைப் பகுதி முழுதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கொடைக்கானல் அருகில் மன்னவனூர், பூண்டி உள்ளிட்ட மேல்மலை கிராமங்களில் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை வழி மறித்து சிலர் போதை காளான் மற்றும் கஞ்சா விற்க முயற்சி செய்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பின் உடனே காவல்துறையினர் அங்கு சென்றபோது 5 பேர் கொண்ட ஒரு கும்பல் தப்பிஓட முயற்சி செய்தது. அப்போது அந்த கும்பலை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். அத்துடன் அந்த கும்பல் வைத்திருந்த பைகளை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது போதைகாளான் மற்றும் 2 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து பிடிபட்டவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் கொடைக்கானல் மேல் மலை கிராமமான மன்னவனூரை சேர்ந்த வைரவேல் (32), லட்சுமணன் (38), மதன் (24), குணசேகரன் (52), பூண்டியை சேர்ந்த சத்யராஜ் (32), கேரளாவை சேர்ந்த சரத்குமார் (60) என்பது தெரியவந்தது.

அதன்பின் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 6 பேரையும் கைது செய்தனர். அதுமட்டுமின்றி அவர்களிடமிருந்து போதைகாளான் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதனிடையே கொடைக்கானல் மலைப் பகுதிகளில் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு போதைகாளான் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என கொடைக்கானல் போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |