Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“வளைகாப்பு நிகழ்ச்சியை ரத்து செய்த சோனம் கபூர்”…. வெளியான காரணம்….!!!!!

நடிகை சோனம் கபூர் திடீரென தனது வளைகாப்பு நிகழ்ச்சியை ரத்து செய்வதற்கான காரணம் வெளியாகி இருக்கிறது.

பாலிவுட் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் சோனம் கபூர். இவர் சென்ற 2018 ஆம் வருடம் தொழில் அதிபர் ஆனந்த் அஹூஜா என்பவரை திருமணம் செய்து கொண்டார். சென்ற சில மாதங்களுக்கும் முன்பாக தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நிலையில் சோனம் கபூரின் வளைகாப்பு நேற்று முன்தினம் மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் இருக்கும் சோனம் கபூரின் அத்தை வீட்டில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக ஆடம்பரமான அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களுக்கு கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் வளைகாப்பு நிகழ்ச்சி ஆனது நேற்று ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக சோனம் கபூரின் இல்லத்தில் சிறிய கெட்டுகெதர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் வளைகாப்பு ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதன் காரணமாக வளைகாப்பை ரத்து செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |