பிரபல நாட்டிற்கு செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டி முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.
சிங்கப்பூரில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டின் போது டெல்லி மாடல் என்ற தலைப்பில் டெல்லியின் சிறப்பம்சங்கள் குறித்து விவரிக்கப்படும். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக முதல் மந்திரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதி சிங்கப்பூருக்கு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி இருந்தார்.
ஆனால் இதுவரை எந்த ஒரு அனுமதியும் கிடைக்காததால் முதலமைச்சர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் ஒரு மாதத்திற்கு மேலாகியும் மத்திய அரசின் அனுமதி கிடைக்காமல் தான் காத்திருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளதாவது. தான் ஒரு குற்றவாளி அல்ல என்றும், நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் என்றும், எனக்கு அனுமதி கிடைக்காதது எதற்காக எனவும் கூறியுள்ளார். அதன் பிறகு தான் சிங்கப்பூருக்கு செல்வதை தடுப்பதில் அரசியல் பின்னணி இருப்பதாகவும் கூறியுள்ளார்.