Categories
மாநில செய்திகள்

மாணவி மர்ம மரண வழக்கு….. நீதிமன்றம் மறுப்பு…..!!!!

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அந்த பள்ளியை போராட்டக்காரர்கள் சூறையாடினர். இதை கண்டித்து தமிழக முழுவதும் தனியார் பள்ளிகள் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்ட நிலையில், தற்போது ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இதற்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவி மரண வழக்கில் தங்கள் தரப்பு மருத்துவரை நியமிக்கும் வரை மறு பிரேத பரிசோதனையை நிறுத்தக் கோரிய மனுவை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. மாணவியின் தந்தை ராமலிங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மாற்ற முடியாது என்றும் வேண்டுமானால் சிபிசிஐடிக்கும், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கும் மனு அழியுங்கள் என்றும் கூறினார்.

Categories

Tech |