Categories
தேசிய செய்திகள்

இளைஞர், பெண்களுக்கு கடன்….. அள்ளிக் கொடுக்கும் தாட்கோ நிறுவனம்….. பயன்படுத்திக்கோங்க…..!!!!

2022-23 ஆம் நிதி ஆண்டில் தாட்கோ மூலம் 20 கோடி அளவில் கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த திட்டத்தின் கீழ் 984 நபர்களுக்கு 6.26 கோடி மானியத்துடன் கூடிய 20.85 கோடி கடன் உதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “கோவை மாவட்டத்தில் தாட்கோ மூலம் கடந்த நிதியாண்டில் தொழில் முனைவர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்த 38 நபர்களுக்கு 66.96 லட்சம் மானியத்துடன் கூடிய கடனுதவி கிடைக்கப்பெற்றுள்ளது.

இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலமாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்த 34 நபர்களுக்கு 56.36 லட்சம் மானியத்துடன் கூடிய 1.89 கோடி கடன் உதவியும், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவியும் வழங்கப்பட்டுள்ளது. 2022-23 ஆம் நிதியாண்டில் தாட்கோ மூலம் நிலம் வாங்குதல் மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் பழங்குடியின வகுப்பை சேர்ந்த 18 நபர்களுக்கு 49. 50 லட்சம் மானியத்துடன் கூடிய 1.65 கோடி கடன் உதவியும், தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த 156 நபர்களுக்கு கடனுதவியும், இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 114 நபர்களுக்கு 7.20 கோடி கடனுதவியும் வழங்கப்படுகின்றது.

மேலும் 696 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 4.80 கோடிக்கண உதவியும் என மொத்தம் 984 நபர்களுக்கு 6.26 கோடி மானியத்துடன் கூடிய 20.85 கோடி கடன் உதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |