Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பல இடங்களில் கைவரிசை காட்டிய 2 திருடர்கள்”…. கைது செய்த தனிப்படை போலீசார்….!!!!!

பல திருட்டுகளில் ஈடுபட்ட இரண்டு பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலையை அடுத்திருக்கும் போடிப்பட்டியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் சென்ற மாதம் மூன்றாம் தேதி இரவு தன்னுடைய வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளில் நிறுத்திவிட்டு தூங்கச் சென்றுள்ளார். பின் மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபொழுது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் காவல் நிலையத்தில் சீனிவாசன் புகார் கொடுத்தார். இதனால் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

மேலும் மடத்துக்குளம் தாலுகாவில் உள்ள காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது தெரியவந்தது. மேலும் கேஸ் சிலிண்டர்களும் திருடப்பட்டன. இதுபோல தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதால் துணை போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் தனிபடை அமைக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முல்லை நகரை சேர்ந்த பிரவீன் குமார், சக்திவேல் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தார்கள். மேலும் அவர்கள் திருடி வைத்திருந்த 7 மோட்டார் சைக்கிள்கள், 12 கேஸ் சிலிண்டர்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தார்கள்.

Categories

Tech |