Categories
மாநில செய்திகள்

BIG BREAKING : முக்கிய குற்றாவளி ஜெயக்குமார் சரண் ….!!

குரூப் 2-A  , குரூப் 4 முறைகேட்டில் தேடப்பட்டு வந்த குற்றவாளியாக இருந்த ஜெயக்குமார் நீதிமன்றத்தில் சரண் அடைந்து இருக்கிறார்.

குரூப் 4 தேர்வு முறைகேடு குரூப் 2-ஏ தேர்வு முறைகேடு இந்த இரண்டு வழக்குகிலும் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக இருக்கக்கூடிய ஜெயக்குமார் சைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் சரண் அடைந்து இருப்பதாக சிபிசிஐடி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயக்குமாரை தேடப்படும் குற்றவாளியாக சிபிசிஐடி போலீஸார்  அறிவித்திருந்தார்கள்.

நேற்று கேரளா , ஆந்திரா , கர்நாடகா என மூன்று மாநிலங்களில் தேடக்கூடிய பணியில் CBCIDI போலீசார் ஈடுபட்டு வந்தநிலையில் தற்போது சைதாப்பேட்டை 23வது நீதிமன்றத்தில் ஜெயக்குமார் சரண் அடைந்து இருக்கிறார்.அவரை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

ஜெயக்குமார் வீட்டில் சிபிசிஐடி போலீசார் மேற்கொண்ட சோதனையில் 60க்கும் மேற்பட்ட பேனாக்கள் , பென்ட்ரைவ் கைப்பற்றப்பட்டது. மேலும் ஜெயக்குமார் குறித்து பொதுமக்கள் தகவல் கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படுமென்று CBCIDI போலீசார் அறிவித்திருந்த நிலையில் தற்போது அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார்.

Categories

Tech |