Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் நீட் நுழைவுத்தேர்வு நிறைவு…… 18.72 லட்சம் மாணவர்கள் பங்கேற்றதாக தகவல்…..!!!!!

நாடு முழுவதும் நடைபெற்ற எம்பிபிஎஸ், பிடிஎஸ் ,ஆயுஷ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நுழைவு தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது.

இந்தியாவில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை கொண்டே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெறு முடிந்தது.

இந்நிலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுசு உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் 497 நகரங்களில் நடைபெறும் இந்த தேர்வை 18 லட்சத்து 72,339 மாணவர்கள் எழுதினர். தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் இந்த தேர்வு நடைபெற்றது. தமிழக முழுவதும் 1.42 லட்சம் பேர் நீட் தேர்வை எழுதியுள்ளனர். தமிழ் மொழியில் 3183 பேர் உள்பட தமிழகத்திலிருந்து 1,04,286 பேர் நீட் தேர்வு எழுதியுள்ளனர். இந்த ஆண்டு தமிழ் மொழியில் 60 ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுதியுள்ளனர். சென்னையில் மட்டும் 20 ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |