Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த கட்டிடத் தொழிலாளி”…. போக்சோ சட்டத்தின் கீழ் கைது…!!!!!

சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி அருகே இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி சென்ற மாதம் 25ஆம் தேதி அன்று திடீரென காணாமல் போனதால் பெற்றோர்கள் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். ஆனால் சிறுமியை பற்றி தகவல் தெரியாததால் காவல் நிலையத்தில் புகார் செய்ததன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் விசாரணையில் சிறுமியை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நத்தத்துபட்டியைச் சேர்ந்த மாரிச்செல்வம் என்ற கட்டிட தொழிலாளி கடத்திச் சென்றது தெரியவந்ததையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறுமியை மீட்டார்கள். பின் விசாரணையில் அவர் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்ததை தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் சிறுமியை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். பின் மாரி செல்வத்தை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்கள்.

Categories

Tech |