Categories
உலக செய்திகள்

லடாக் எல்லைக்கு அருகே சுற்றுப்பயணம் சென்ற சீன அதிபர்…. இராணுவ வீரர்களுக்கு பாராட்டு…!!!

சீன நாட்டின் அதிபரான ஜி ஜின்பிங் மூன்று நாட்கள் சுற்று பயணமாக லடாக்கின் எல்லைக்கு அருகில் இருக்கும் ஜின்ஜியாங் மாகாணத்திற்கு சென்றிருக்கிறார்.

இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையில் எல்லை பிரச்சனை நீடித்துக் கொண்டிருக்கிறது. சீனா, அருணாச்சல பிரததேசம் எங்களுடையது என்று கூறிக் கொண்டிருக்கிறது. மேலும், எல்லைப் பகுதிகளில் அடிக்கடி பிரச்சனையை செய்து வருகிறது. இந்திய தரப்பிலிருந்தும் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்திய நாட்டின் லடாக் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள சீன நாட்டின் ஜின்ஜியாங் பகுதிக்கு அந்நாட்டு அதிபர் சென்றிருக்கிறார். அங்கு பாதுகாப்பு பணியை மேற்கொண்டிருக்கும் தங்கள் வீரர்களிடம் பேசியுள்ளார்.

மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக சென்ற அதிபர், எல்லைப் பகுதியில் உள்ள தங்கள் நாட்டு வீரர்களிடம் சிறப்பாக பாதுகாப்பு பணியை மேற்கொள்வதாக பாராட்டுக்களை கூறியுள்ளார்.

Categories

Tech |