Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

உள்ளாடையில் ரத்தக்கறை…. மார்பு பகுதியில் காயங்கள்…. மாணவி மரணத்தில் திடீர் திருப்பம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்தமாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பான விவகாரம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகிகள் தெரிவித்த நிலையில் ,இது கொலை என்று மாணவியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் பள்ளி மாணவி மரணம் விவகாரத்தில் விசாரணை நடத்த பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

மாணவி மரணம் நடந்த இடத்தில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 13ஆம் தேதி பிளஸ் டூ மாணவி மாடியில் இருந்து குதித்து உயிரிழந்ததாக பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்தது. இருந்தாலும் மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

இதனிடையே கடந்த நான்கு நாட்களாக அவரது உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று அது பெரிய கலவரமாக மாறி உள்ளது. இந்நிலையில் மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் மாணவியின் உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக அனைத்து காயங்களும் மாணவி உயிரிழப்பு அதற்கு முன்பே ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மூக்கு, வலது தோல், வலது கை,வயிறு மற்றும் வயிற்றின் மேல் பகுதி ஆகிய இடங்களில் காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் எலும்பு முறிவு மற்றும் ரத்த சிதைவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதனைப் போலவே அவரின் மேலாடை, கால் சட்டை,மேல் மற்றும் கீழ் உள்ளாடை இரண்டிலும் ரத்த கரை இருந்ததாகவும் கூறப்படுகிறது. இடது தலைப்பகுதி உடைந்து இருந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதிகளவு ரத்தப்போக்கு மற்றும் அதிர்ச்சியால் மாணவி உயிரிழந்ததாக அறிக்கையில் இறுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தாலும் உள்ளுறுப்புகளின் ரசாயன பகுப்பாய்வு அறிக்கை வந்த பிறகு தான் மாணவி மரணம் குறித்து முழுமையாக தெரியவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Categories

Tech |