Categories
மாநில செய்திகள்

மாணவி மரணம்…. “வன்முறை தீர்வாகாது, உடனே இத நிறுத்துங்க”…. நடிகை குஷ்பு டுவீட்…..!!!!

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 13ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த சின்ன சேலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் மாணவியின் உடலை வாங்க மறுத்தும், மாணவி மரணத்திற்கு நீதி கேட்டும், பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவியின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் காவல்த்துறை வாகனம் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய நிலையில் போலீசார் தடியடி நடத்தினர். சக்தி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நுழைந்த போராட்டக்காரர்கள் கண்ணில் பட்ட பள்ளி பேருந்து வாகனங்களை தீயிட்டுக் கொளுத்தினர். அதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவி இறப்பு தொடர்பான போராட்டம் வன்முறையாக மாறியதால் கள்ளக்குறிச்சி சின்னசேலம் தாலுகா பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும் சின்ன சேலத்தில் கூடியுள்ள போராட்டக்காரர்களை தடியடி நடத்தி அதிரடிப்படை கலைத்த நிலையில் கலவரம் கட்டுக்குள் வந்துள்ளதாகவும், அமைதி நடவடிக்கை தொடர்வதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.மேலும் கலவரம் நிகழ்ந்த பகுதிக்கு உள்துறை செயலாளர் பணிந்திர ரெட்டி மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு விரைந்துள்ளனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் வன்முறை தீர்வாகாது என நடிகை குஷ்பூ ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், கள்ளக்குறிச்சியில் 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆசிரியர்களால் சித்திரவதை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதை முறையாக இறுதி வரை விசாரிக்க வேண்டும். நீதியை நிலை நாட்ட நாம் ஒன்றுபடுவோம். ஆனால் வன்முறை இதற்கு தீர்வு கிடையாது. இதை நிறுத்துங்க என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |