தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட்டிக் போட்டிகள் வருகின்ற 28ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2500 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்ற விளையாட இருக்கின்றனர். மேலும் இந்த போட்டி தொடர்பாக பொதுமக்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இருசக்கர வாகன ஊர்வலம் ஈரோட்டில் நடைபெற்றது. ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்துள்ளார்.
ஈரோடு வ உ சி மைதானத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் மேட்டூர் ரோடு, அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா, பெருந்துறை ரோடு, கலெக்டர் அலுவலகம் வரை சென்று மீண்டும் வ உ சி மைதானத்தில் நிறைவடைந்துள்ளது. இதில் மாவட்ட விளையாட்டு அதிகாரி சதீஷ்குமார் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி செந்தில்குமார் போன்றோர் கலந்து கொண்டுள்ளனர்.