Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி….. 1 லட்சம் பரிசு….. மிஸ் பண்ணிடாதீங்க மாணவர்களே….!!!!!

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் மற்றும் லிங்கன் தொழில் மற்றும் மேலாண்மை பல்கலைக்கழகம் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை போட்டி ஒன்றை நடத்துகிறது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “அறியப்படாத செய்திகள்” என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்கள் தங்களுடைய ஊரில் பிடித்த, ரசித்த, நடந்த நிகழ்வுகள், செய்திகள், உலகறியாத ஆளுமைகள் குறித்து கட்டுரைகளை எழுதி அனுப்பலாம்.

இதற்கு நுழைவு கட்டணம் எதுவும் கிடையாது. கட்டுரைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும். ஆயிரம் சொற்களுக்கும் மிகாமல் இருக்க வேண்டும். எழுதிய கட்டுரைகளை [email protected] என்ற இணையதள முகவரிக்கு வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். போட்டிக்கான பரிசு ஒரு லட்சம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |