வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆவுடையானூர் பகுதியில் செந்தில் முருகன் என்பவர் ரசித்து வருகிறார். இவருக்கு அருள்ராஜ்(21) என்ற மகன் இருந்துள்ளார். 10-ஆம் வகுப்பு வரை படித்த அருண்ராஜ் பள்ளி படிப்பை தொடராமலும், வேலைக்கு செல்லாமலும் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் செல்போனில் அடிக்கடி கேம் விளையாடிய அருண் ராஜை செந்தில் முருகன் கண்டித்துள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்து அருண்ராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.