இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருள்கள், உணவு, எரிபொருள், மருந்துகள் போன்றவற்றின் விலை அதிகரித்ததோடு தட்டுப்பாடும் ஏற்பட்டதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி மீளா துயரில் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 9-ம் தேதி அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் மாளிகையை கொண்டு வந்துள்ளனர். இந்த தகவலை முன்கூட்டியே ரகசிய உளவாளிகள் மூலம் தெரிந்து கொண்ட கோத்தப்பய மற்றும் அவருடைய குடும்பத்தினர் மாளிகையை விட்டு வெளியேறினர்.
இவர்கள் முதலில் மாலத்தீவுக்கு சென்று அங்கிருந்து தற்போது சிங்கப்பூருக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாக உள்ளது. இந்நிலையில் மக்களின் நீண்ட போராட்டத்திற்கு பிறகு கடந்த வியாழக்கிழமை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகியதால் தற்காலிக அதிபராக ரணில் விக்கிரமசிங்கே தேர்வு செய்யப்பட்டார். இதன் காரணமாக ரணில் விக்ரமசிங்கே வீட்டை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். இவர்களை ராணுவத்தினர் கண்ணீர் புகை கொண்டு வீசி தடுத்தனர். இதன் காரணமாக இலங்கையில் தொடர்ந்து பதற்ற நிலை நீடித்து வருவதோடு அரசியலிலும் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
எனவே சட்ட ஒழுங்கை பாதுகாப்பதற்காக இலங்கையில் முப்படை ராணுவ தலைமை தளபதியின் தலைமையின் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிபர் கோத்தப்பய ராஜபக்சே மின்னஞ்சல் முகவரி மூலமாக அனுப்பிய தன்னுடைய ராஜினாமா கடிதத்தில் நான் இயன்றவரை என்னுடைய நாட்டுக்கு சேவை தான் செய்தேன் எனவும், இனி வரும் காலங்களிலும் நான் நல்லதை மட்டுமே செய்வேன் எனவும் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் கொரானா பரவலும், பொது முடக்கமும் தான் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்னும் என்னுடைய மக்களை காப்பதற்காகவே நான் பொது முடக்கத்தை அமல்படுத்தினேன் எனவும் கோத்தப்பய தெரிவித்துள்ளார். அதன் பிறகு வருகிற 7 நாட்களுக்குள் நாடாளுமன்ற சட்டசபை கூறப்பட்டு புதிய அதிபர் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்ட தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.