Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடியிருப்பில் பற்றி எரிந்த தீ…. அலறியடித்து ஓடி வந்த வாலிபர்கள்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

அடுக்குமாடி குடியிருப்பில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கம் லட்சுமி அம்மாள் தெருவில் மனோகர் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பின் 3-வது மாடியில் இருக்கும் அறைகளில் 30-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் தங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு நேரத்தில் ஒரு அறையில் திடீரென தீப்பிடித்து எரிந்து மற்ற அறைகளுக்கும் வேகமாக பரவியது. இதனால் வாலிபர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

இது குறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராட்சத ஏணியுடன் கூடிய தீயணைப்பு வாகனம் மூலம் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீபத்தில் மூன்றாவது மாடியில் இருந்த அனைத்து அறைகளும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |