கல்வி அதிகாரம் முழுவதும் மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது “இந்தியை கட்டுப்படுத்துவதை ஆரம்பத்தில் இருந்தே நாம் எதிர்த்தோம். மாநிலத்தில் முழுமையாக கல்வி அதிகாரத்தை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.
புதிய கல்வி கொள்கை குறித்த முதல்வர் ஒரு குழுவை அமைத்துள்ளார். இந்த குழுவில் உங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் பலவற்றை நாம் எதிர்க்கிறோம். குறிப்பாக மூன்று, ஐந்து ,எட்டாம் வகுப்புக்குக்கெல்லாம் பொது தேர்வு உள்ளது. அவ்வாறு பொது தேர்வு வைத்தால் இடைநீற்றல் அதிகமாகும். எனவே இதனை வேண்டாம் என்கிறோம். பட்டப்படிப்புக்கும் நுழைவு தேர்வு என்பதை நாம் முழுமையாக எதிர்க்கிறோம்” என அவர் பேசினார்.