சென்ற மாத இறுதியில் நடந்த 47-வது GST கவுன்சில் கூட்டத்தில் பேனா மை துவக்கி LED விளக்குகள் வரையுள்ள பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவைவரி அதிகரிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் நாளொன்றுக்கு ரூபாய் 1000-க்கு கீழ் உள்ள ஹோட்டல் அறைகளுக்கான வரியை உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது. இதுகுறித்து கடந்த ஜூன் 29 ஆம் தேதி வெளியிட்ட செய்தி குறிப்பின்படி, நாளொன்றுக்கு ரூபாய் 1000 வரையிலான கட்டணம் வசூலிக்கும் ஹோட்டல் அறைகளுக்கு 12 சதவீதம் வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. எனினும் இதுகுறித்து அரசு இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
இதற்கு முன்பாக நாளொன்றுக்கு 1,000 ரூபாய்வரை கட்டணம் வசூலிக்கும் ஹோட்டல் அறைகளுக்கு GST விலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்போது ஹோட்டல் அறைகளுக்கு உயர்த்தப்பட்ட GST வரியானது ஜூலை 18 முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதுபற்றி வரி ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை தலைவர் பூனம் ஹர்ஜானி கூறியதாவது “இதுவரையிலும் ஒரு ஹோட்டல், விடுதி, விருந்தினர் மாளிகை, கிளப் (அல்லது) கேம்ப்சைட் குடியிருப்பு (அல்லது) தங்கும் அறைகளுக்கான சேவைகள் நாளொன்றுக்கு ரூபாய் 1000 (அல்லது) அதற்கு சமமான தொகைக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
GST கவுன்சில் தற்போது அந்த விலக்கை திரும்பப்பெற்று 12 சதவீத GST விகிதத்தை கட்டணத்துடன் சேர்த்து வசூலிக்க பரிந்துரைத்துள்ளது. இந்த 12 % ஜிஎஸ்டி-க்கு வரி குறைந்த கட்டணங்களை கொண்ட ஹோட்டல் நிர்வாகங்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்” என கூறியுள்ளார். தற்போது GST கவுன்சில் அறிவிப்புக்கு முன்பு ஒரு அறைக்கு மொத்தத் தொகையாக ரூபாய் 1,800 செலுத்தவேண்டி இருந்தது. அதனை தொடர்ந்து ஜூலை 18 முதல் நடைமுறைக்கு வரும் அடிப்படையில் 12 சதவீத விகிதத்தில் GST விதிக்கப்பட்டு உள்ளதால் ரூபாய் 1800 கட்டணத்துடன் சேர்த்து ரூபாய் 216 கூடுதலாக செலுத்தவேண்டும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.