சிவகங்கை காளவாசல் பகுதியில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தச்சு வேலை செய்கிறார்m இவர் மீது காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோவில் பூச்செரிதல் விழாவில் ஆங்காங்கே கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனை போல காளவாசல் பகுதியிலும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை பார்க்க வந்த பரமசிவத்தை நள்ளிரவு 1 மணிக்கு பின்தொடர்ந்த மர்ம கும்பல் அவரை விரட்டி ஓட ஓட வெட்டிக் கொடூரமாக கொலை செய்து தப்பி சென்றனர்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சிவகங்கை நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பரமசிவத்தின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து போலீசார் பரமசிவத்தை வெட்டிக் கொன்ற மர்ம நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். இவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த கொலை நடைபெற்று இருக்கலாம் என்பதை பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.