தமிழ்நாட்டில் உள்ள வணிகர்கள் மட்டுமே மாநிலம் முழுவதும் வணிகம் செய்ய வேண்டும் என்று மதுரை வணிகர் சங்க விழாவில் அமைச்சர் மூர்த்தி பேசியுள்ளார்.
மதுரை தெப்பக்குளத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் பேரமைப்பின் முப்பெரும் விழாவில் வணிகர் வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பங்கேற்றார். பின்னர் நிகழ்ச்சியில் பேசி அமைச்சர் மூர்த்தி தமிழகத்தில் உள்ள வணிகர்கள் மட்டுமே மாநில முழுவதும் வணிகம் செய்ய வேண்டும். வெளி மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வணிகம் செய்ய வருபவர்களை அனுமதிக்க கூடாது.
தமிழகத்தில் 3 லட்சம் வணிகர்கள் வரி செலுத்தவில்லை. மேலும் வணிகர்கள் முறையாக வரி செலுத்தினால் மாநிலம் வளர்ச்சி அடையும். வணிகர் வரி செலுத்தினால் அவர்களுக்கு தமிழக அரசு என்றும் துணை நிற்கும். தமிழக அரசின் வருவாயில் 80 சதவீதம் வருவாய் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரி வழியாக கிடைக்கிறது என்று தெரிவித்தார். மேலும் வட மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் செய்யும் வணிகத்தில் வரி முறைகேடு செய்கிறார்கள் எனவும், வட மாநில வணிகர்களை தமிழ்நாட்டில் இருந்து அப்புறப்படுத்த தமிழ் வணிகர்கள் முன் வரவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.