Categories
மாநில செய்திகள்

“ஒரு கணக்கில் 5 ப்ரோபைல்களை உருவாக்கலாம்”…. பேஸ்புக்கின் அசத்தல் அப்டேட்….!!!!!!!

மெட்டா  நிறுவன தலைமையின் கீழ் இயங்கும் உலகின் மிகப் பெரும் சமூக தலைவளமான facebook பயனர்கள் ஒரு கணக்கினை கொண்டு ஐந்து ப்ரொபைல்களை உருவாக்கும் வகையிலான அப்டேட்டை சோதனை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலமாக அனைத்து ப்ரொபைல் ஒரே கணக்கில் இருந்து கையாள முடியும். உலக அளவில் instagram tiktok பிரபலமாகி வருவதால் அதே முறையை கையாள இந்த நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. இருப்பினும் இந்த அம்சத்தினை இந்த நிறுவனம் எப்போது பயனர்களுக்கு வழங்கும் என்ற தகவலை இன்னும் வெளியிடவில்லை.

இளைஞர்களின் இதயத்துடிப்பு போல் பிரபலத்தின் உச்சியில் இருந்த பேஸ்புக்கால் தற்போது தொழில் போட்டியில் ஈடு கொடுக்க முடியவில்லை. மேலும் அதனை சரி செய்யவே நிறுவனம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.. சமூக வலைதள கணக்குகளின் மீது பயனர்களின் ஆர்வம் குறைந்து குறுகிய வீடியோ தளங்கள் மீது அவர்களின் பார்வை விழ தொடங்கி இருக்கின்றது. இதனை புரிந்து கொண்டு தான் மெட்டா   இன்ஸ்டா ரீல்ஸ் போன்று பேஸ்புக்கிலும் ரீல்ஸ் அம்சத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஒரு சுயவிவரத்தில் இருந்து மற்றொரு சுய விபரத்திற்கு மாறுவது எளிமையானதாக இருக்கும். ஏனென்றால் இதற்கு சில கிளிக்குகள்  மட்டுமே  தேவைப்படும். கையாளுதல் ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் உள்ளதைப் போல இருக்கும் இருந்த போதிலும் ப்ரொபைல்கள் அதன் தளத்தை பயன்படுத்துவதற்கான பொதுவான நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என மெட்டா குறிப்பிடுகின்றது.

அதன்படி வேறு ஒரு நபரை போல் ஆள்மாறட்டும் செய்யவும் அல்லது வெறுக்கத்தக்க உள்ளடக்கத்தை இடுகையிடவோ  முடியாது.தற்போது பேஸ்புக் லட்சக்கணக்கான பயனர்களை இழந்து வருகின்றது. இதனை சரி செய்யும் மிகப்பெரிய பொறுப்பு மெட்டாவசம் இருக்கிறது. அதனால் பயனர்களின் தேவைகளை அறிந்து அவற்றை நிவர்த்தி செய்யும் முறைகளில் இந்த நிறுவனம் இறங்கி உள்ளது. அதேபோல பல ஆண்டுகளாக பேஸ்புக் கடவுச்சொல்லை மாற்றும்போது ஏற்படும் சிக்கல்கள் பற்றி பயனர்கள் பல புகார்களை தெரிவித்திருக்கின்றனர். அது குறித்து இந்த நிறுவனம் எந்த அப்டேடுகளை வெளியிடவில்லை என்பது வருந்ததக்க ஒன்றாக உள்ளது.

Categories

Tech |