சின்னத்திரையில் தனது பயணத்தை தொடங்கி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்,தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியர் என பல்வேறு முகங்களில் வளம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் டான் திரைப்படம் அண்மையில் வெளியானது. இந்த படம் வசூலில் மிகப்பெரிய சாதனையைப் படைத்தது. அந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி இருவரும் கல்லூரி மாணவர்களாக நடித்துள்ளனர். மேலும் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். அனிருத் இசையில் வெளியான இந்த திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனையைப் படைத்தது.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் உருவாகும் பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அனுதீப் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் சத்யராஜ், உக்கரை நடிகை மரியா ரியாபோஷோப்கா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த ஆண்டு தீபாவளி என்று திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த திரைப்படத்திற்கு மாவீரன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டனர். அந்த வீடியோ அனைவரையும் கவரும் வகையில் மாசாக இருப்பதாக ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் அந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது. படத்திற்கு ஏற்ப டைட்டிலை போல சிவகார்த்திகேயன் லுக்கும் ரஜினி கெட்டபில் இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அது மட்டும் அல்லாமல் மாவீரன் திரைப்படத்தின் அடுத்த கட்ட பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.